“நூதன முறையில் கண்காணிப்பு” வீட்டை நோட்டமிட்டு நகை, பொருட்கள் கொள்ளை; செக் வைக்க காத்திருக்கும் போலீஸ்!

0 344
Stalin trichy visit

திருச்சி மிளகுபாறையை அடுத்துள்ள பொன்நகர்- செல்வா நகர் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கடந்த 8ம் தேதி தன்னுடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மீண்டும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெங்களூருவில் இருந்து திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே நுழைய முயன்றபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள துணிகள் அங்கும், இங்குமாக சிதறி கிடந்தன. அதனைத் தொடர்ந்து பீரோவில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகை, லேப்டாப், சுவாமி அறையில் இருந்த குத்து விளக்குகள் உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. பின்னர் அதிர்ச்சி அடைந்த அவர்

உடனடியாக திருச்சி செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொள்வதற்காக பூட்டியிருக்கும் வீட்டு கேட்டுகளில் ஸ்டிக்கரை ஓட்டிச் சென்றுள்ளார்கள். அது குறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கும் போது திருடப்போகும் வீட்டை முடிவு செய்யும் திருடர்கள் அந்த வீட்டின் கதவுகளில் ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். ஸ்டிக்கர் கிழிந்து இருந்தால் வீட்டில் ஆள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள். கிழியவில்லை என்றால் வீட்டில் ஆள் இல்லை

என்று அறிந்து வீட்டிற்குள் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்று பல்வேறு வடிவங்களில் நூதன முறையில் வீடுகளை கண்காணித்து வீட்டில் ஆள் இல்லை என்பதை உணர்ந்த பின்னர் திருட்டில் ஈடுபடும் சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையுடனம் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். இத்திருட்டு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். செல்வா நகரில் உள்ள இரண்டு வீடுகளிலும் 15 பவுன் நகை திருட்டு போயுள்ளதால் கும்பலாக ஒன்றுகூடி இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்களோ என்று காவல்துறையினர் கருதுகின்றனர். மேலும் பல லட்சம் ரூபாய்க்கு வீடுகளை கட்டி குடியேறும் மக்கள் வீட்டின் முன்பாக ஒரே ஒரு சிசிடிவி கேமராவை பொருத்துவதற்கு தயங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.