ஸ்கூட்டர் நிலைதடுமாறி மரத்தில்மோதி பெண் போலீஸ் படுகாயம்!

0 342
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் விசித்திரா(வயது 43). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்ற ஆவண பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சந்திரசேகர்(வயது 49). இவர் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விசித்திரா நேற்று மதியம் பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றார். அப்போது

சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி முன்பு உள்ள வேகத்தடையில் நிலைதடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர். பின்னர் மேல் சிகிச்சை தனியார் மருத்துவமனையில் சேர்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.