துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் சிஐடியு விவசாயிகள் மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம்!

0 333
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இன்று சிஐடியு விவசாயிகள் சங்கம் சார்பாக மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த கோரியும், ஊதிய இழப்பு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தனியார் நிறுவனங்கள் கைவிட வலியுறுத்தியும், முறை சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை பலப்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வலியுறுத்தியும், தனியார் நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்கம் மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று துவரங்குறிச்சி பேருந்து நிலையம் முன்பாக சிஐடியு விவசாயிகள் சங்கம் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ,விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் முருகேசன், தலைவர் ஆட்டோ சங்கர், வி.தொ.ச பொறுப்பாளர் அண்ணாதுரை மல்லிகா, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராமசாமி , செயலாளர் புஷ்பராஜ், போக்குவரத்து சங்கத்தின் சுரேஷ் ,சுல்தான் பாட்ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.