கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்; நாளை நடக்கிறது!
திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- திருச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்தமருத்துவ பிரிவில் நாளை (வெள்ளிக்கிழமை) இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம்,
எடை பரிசோதிக்கப்பட்டு உரிய மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. சுகப்பிரசவம் ஏற்பட யோகா பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு காணப்படும் வாந்தி, கர்ப்பகால சர்க்கரை நோய், ரத்த கொதிப்புக்கும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். எனவே கருவுற்ற பெண்கள் அனைவரும் இந்த சிறப்பு இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை பெற்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.