திருச்சி வயலூர் ரோடு சாந்தசிவ நகரை சேர்ந்தவர் ராமர்(வயது 43). அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராமர், வீட்டை விட்டு
வெளியேறினார். தொடர்ந்து குடும்பத்தினர் தேடி பார்த்த போது, டிபன் கடையில் ராமர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.