சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது!

0 324
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு உதவிப்பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டேவிட்(வயது 21) வையம் பட்டி பகுதியில் கட்டிட வேலைக்கு வந்தபோது சிறுமியிடம் பழகியுள்ளார். கடந்த மார்ச் 28ம் தேதி டேவிட் ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்தி சென்றுவிட்டார். அனைத்து

இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில் சிறுமியின் பெற்றோர் புத்தாநத்தம் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் டேவிட்டை தேடி சென்றபோது சிறுமியை மட்டும் மீட்டனர். இந்த நிலையில் டேவிட்டை கைது செய்தனர். விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் மணமல்லி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.