“திமுக உட்கட்சி தேர்தல்” விண்ணப்ப படிவம் பெற அழைப்பு!

0 422
Stalin trichy visit

மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் வழக்கறிஞர் க.வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கை, திருச்சி மத்திய மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள வார்டுகளில் திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியிலுள்ள வட்டங்களில் போட்டியிட விரும்புவர்கள் ஏப்.22ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் மாநகராட்சி வட்டங்களில் போட்டியிட

 

விரும்புவர்கள். வருகிற 29ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தலைமை கழக பிரதிநிதி செல்வராஜிடம் வழங்கிட வேண்டும். இதற்கான விண்ணப்ப மனுக்கள் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அலுவலகம் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூர் தி.மு.க அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். வார்டுகளிலுள்ள நிர்வாகிகள் பொறுப்பிற்கு போட்டியிட விரும்புகிறவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்தியும், செயற்குழு பொறுப்பிற்கு போட்டியிட விரும்புகின்றவர்கள் ரூ.20ம் செலுத்தி மனுக்களை பெற்று கொண்டு பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாட்களில் வழங்கிட வேண்டுமென அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.