நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்!

0 327
Stalin trichy visit

திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவையை சேர்ந்தவர்கள் முருகேசன்-ஹேமலதா தம்பதி. இவரது மகள் திவ்யதர்ஷினி. இவர்கள் மூவரும் கோவை எல்ஐசி காலனியில் ராயல் கமாடிட்டி என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். தொடர்ந்து திருச்சி மாவட்டம் காட்டூர் எல்லைக்குடியில் கிளை அலுவலகம் வைத்து நடத்தினர். இங்கு அதிக லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி முதலீடு பெற்றனர். பெற்ற முதலீடுகள் சில மாதங்களில் திருப்பி வழங்கப்படும் எனவும், வங்கிகளில் கடன் பெற்று தரப்படும் எனவும் கூறினர். மேலும் ஜெயம் என்ற பெயரில் மசாலா பொருட்கள் தயாரித்து மொத்தவிலைக்கு வாங்கி

 

விற்பதாகவும், இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பிய பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சுமார் ரூ.3 கோடி வரை முதலீடு செய்தனர். தொடர்ந்து கூறியபடிலாபம் மற்றும் அசலை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகினர். இதுகுறித்த பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப் பட்டவர்கள் மன்னார்புரத்தில் உள்ள திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம். மேலும் விவரம் தெரிந்து கொள்ள 04312422220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.