20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் பழைய போர்டிகோ அருகே, திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள வணிகவரி அலுவலகம், மன்னார்புரத்தில் உள்ள பல்துறை அலுவலக கட்டிட வளாகம், திருச்சி கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள்,
ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வளன்அரசு, மாவட்ட செயலாளர் கென்னடி, மகளிர் துணை குழு இணை அமைப் பாளர் மார்க்ரேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.