மலேசிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 23 பேர் விமானத்தில் திருச்சி வந்தனர்!

0 380
Stalin trichy visit

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 23 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் ஏர்போர்ட் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் சுற்றுலா விசாவில் சென்ற நிலையில் அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருந்த

 

தகவலையடுத்து அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு 23 பேரும் சிறையிலடைக்கப்பட்டனர். சிறை தண்டனை காலம் முடிந்ததையொட்டி சிறையிலிருந்து 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் 23 பேரையும் அங்கு தங்க அனுமதிக்காத நிலையில், அந்நாட்டு அரசு அனைவரையும் தமிழகம் அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப் பட்டு சென்றனர். இதில் பெரும்பாலனோர் தேவகோட்டை, ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.