திருச்சியில் ரேஷன் பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுதர்சனம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் எஸ்ஐ அலாவுதீன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி அரியமங்கலத்தில்
உள்ள ஒரு மாவு மில்லில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த தொகை வாங்கி வைத்து கடைகளுக்கும், மாட்டு தீவனத்திற்கும் மாவாக அரைத்து விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்த உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 கிலோ ரேஷன் அரிசி, 40 கிலோ கோதுமை, 1080 கிலோ குருணை மாவு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி, குருணை மற்றும் கோது மையை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.