திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்!

0 306
Stalin trichy visit

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதல்படியும், இளைஞர் செஞ்சிலுவை சங்க (Youth Red Cross) மண்டல ஒருங்கிணைப்பாளரின் ஆலோசனைப்படியும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளையும் பாரதிதாசன் பல்கலைக்கழக செஞ்சிலுவை சங்க மண்டலம் மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் இன்று பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தலைமையேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளையின்

தலைவர் என்ஜினீயர் ராஜசேகர், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வளர்மதி, பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் பால் தயாபரன், பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப் புலத் தலைவர் ஆனந்த் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் சிறப்பம்சமாக பிஷப் ஹீபர் கல்லூரியில் தட்டச்சராக பணிபுரியும் ராஜா என்பவருக்கு

99 முறை ரத்ததானம் செய்ததைப் பாராட்டி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இந்த மாபெரும் ரத்ததான முகாமில் பிஷப் ஹீபர் கல்லூரியின் 160 மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனர். இந்த மாபெரும் ரத்ததான முகாமை பிஷப் ஹீபர் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் கிப்ட்சன் ஏற்பாடு செய்து சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.