“சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பத் தேரோட்டம்” வெகு விமரிசையாக நடந்தது!

0 318
Stalin trichy visit

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தேரோட்ட விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான சித்திரைத் தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. இதில் அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைப்பெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்களுடன் வெகு விமரிசையாக

நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் 13ம் நாளான நேற்று தெப்பத் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மன் வசந்த மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று தெப்பத் தேரில் எழுந்தருளி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், கோயில் பணியாளர்கள், மற்றும் கோயில் குருக்கள்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.