கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் அளித்தால் ரூ.50 லட்சம் வெகுமதி!

0 444
Stalin trichy visit

கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வுக்குழுவின் தீவிர புலன்விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

இந்த வழக்கு குறித்து பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது கடிதங்கள் மற்றும் கைபேசி குறுஞ்செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலமாக தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்பட்ட தகவலை இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது. எனவே இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் எனது தொலைபேசி எண்ணான 9080616241 என்ற எண்ணிலும், துணைக் காவல் கண்காணிப்பாளர் மதனை 9498120467, 7094012599 (வாட்ஸ்அப் நம்பர்) என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் (இமெயில்) sitcbcidtri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். அதோடு இவ்வழக்கில் துப்புதுலக்க சரியான தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.