தந்தை கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி ஆண் குழந்தை பலி!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் லித்தீஷ் என்ற மகனும், ஒரு கைகுழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று சுரேஷ் தனது மூன்று வயது மகன் லித்திஷை சைக்கிளில் அழைத்துகொண்டு அம்மாபட்டியிலிருந்து காளிப்பட்டி சென்றுள்ளார். அப்போது சேலம் மாவட்டம் பொட்டியாபுரம்

கிராமத்தில் இருந்து அம்மாபட்டிக்கு செங்கல் ஏற்றி வந்த லாரி மீது சுரேஷ் ஓட்டிச்சென்ற சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த லித்தீஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே குழந்தை பலியானன். தந்தையின் கண்முன்னே நடந்த இந்த விபத்தில் சுரேஷிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல்துறையினர் லித்தீஷின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து காயமடைந்த சுரேசையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்துச் சம்பவம் குறித்து லாரி ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.