பெண், ஆண் என 4 பேர் திருச்சியில் மிஸ்ஸிங்!

0 346
Stalin trichy visit

திருச்சி தென்னூர் சின்னசாமி நகரைச் சேர்ந்த விஜயகுமார் மகள் திவ்யா(வயது 15). இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாய் முத்துலட்சுமி தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருச்சி டைமண்ட் பஜார் பகுதியை சேர்ந்த

 

குமார் மகள் கனிஷ்கா (வயது 18) சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னுார் இதாயத்தோப்பு ராமன் மகன் செல்வராஜ் மாயமானது குறித்து தில்லைநகர் போலீசாரும், சுப்பிரமணியபுரம் இந் ராகாந்தி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலவிக்னேஷ்(28) மாயமானது குறித்து கே.கே.நகர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.