“மனைவிக்கு தெரியாமல் வெளிநாடு சென்ற கணவன்” குடும்பத்தின் மீது போலீசார் வழக்கு!

0 424
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்குவாசலைச் சேர்ந்தவர் நவீன்நிஷா(வயது 27). இவருக்கும், சிந்தாமணி பூசாரி தெருவைச் சேர்ந்த மகேஷ்வரனுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நவீன்நிஷா குடும்பத்தினர் 18 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை வரதட்சணையாக வழங்கினர். திருமணம் நடந்த 10 நாட்களில்

 

மனைவியிடம் சொல்லாமல் மகேஷ்வரன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து அவரது பெற்றோரிடம் நவீன்நிஷா கேட்டபோது சில நாட்க ளில் வந்துவிடுவார் என்று கூறி சமாளித்துள்ளனர். ஆனால் 6 ஆண்டுகள் ஆகியும், மகேஷ்வரன் நாடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நவீன்நிஷா அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் மகேஷ்வரன், அவரது தந்தை ராமராஜ், தாய்ருக்மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.