தினமும் குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்த தந்தையை சரமாரியாக வெட்டி கொலை செய்த மகன்!

0 363
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் மேலதெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 46). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மல்லிகாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இவர் வழக்கம்போல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இவரது மகன் பார்த்தசாரதி(வயது 19) ஏன் இப்படி தினமும் குடித்துவிட்டு வந்து

 

அம்மாவிடம் தவறு செய்கிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனால் ரெங்கராஜ் தனது மகனையும் திட்டி உள்ளார். இதனால் கோபம் கொண்ட பார்த்தசாரதி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது தந்தை ரெங்கராஜை பல இடங்களில் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த ரெங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.