திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி 99-வது கல்வியாண்டு நிறைவு விழா!
திருச்சி ஹோலி கிராஸ் 2021-2022-ம் கல்வியாண்டுக்கான 99வது நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளி பேராசிரியர் எல்.கனேசன் கலந்து கொண்டார். கல்லூரியின் செயலர் அருட்சகோ. ஆனி சேவியர், கல்லுரியின் முதல்வர் அருட்சகோ கிறிஸ்டினா பிரிஜிட் ஆகியோர் தலைமைத் தாங்கினர்.
தொடர்ந்து, ஆண்டு முழுவதும் 30 துறைகளின் சார்பாக நடைப்பெற்ற செயல்பாடுகள் ஒலி – ஒளி காட்சிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர் பேரவை உறுப்பினர்கள், நுண்கலைத் துறைச் செயலாளர்கள், ‘விளையாட்டுத் துறை செயலாளர்கள் மற்றும் அனைத்துத் துறை மன்றச் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களையும் பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, பேராசிரியர் எல்.கனேசன் கூறியதாவது: கல்லூரியில் மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் பணி சாதனைகளும் கூடிய கல்வியை வழங்கின்றது. பேராசிரியர்களின் கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், அயராத முயற்சியினாலும் NAAC-ல் “A” பெற்ற கல்லூரியாக திகழ்கிறது. இளம் மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயம் முக்கியமான பங்கு வகிக்கிறது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இக்கல்வி நிறுவனம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை என தெரிவித்தார்.