மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்!

0 359
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படிபள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான

 

தேர்தல் நடைபெற்றது. திருவெறும்பூர் தனி தாசில்தார் கண்ணன் தேர்தல் பார்வையாளராக கலந்து கொண்டார். பின்னர் புதிய உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து பெற்றோர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வு பாடலை தலைமையாசிரியர் கருணாம்பாள் எழுதி, அவரே மேடையில் பாடினார்.

Leave A Reply

Your email address will not be published.