சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

0 368
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் கருப்பசாமி(23). இவர் தனது உறவுக்கார பெண்ணான கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்தநிலையில் இது குறித்து சைல்டுலைன் அமைப்பு புகார் வந்தது. அதன் அடிப்படையில் சைல்டுலைன் அமைப்பினர் எடமலைப்பட்டிபுதூர் சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இது குறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.