என்.ஐ.டி. கல்லூரியின் 59வது ஆண்டு விழா!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியின் 59வது விழாவிற்கு என்.ஐ.டி. கல்லூரி இயக்குனர் அகிலா தலைமை வகித்து கல்லூரியின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து எடுத்து கூறினார். ஐசி பிரிவு தலைவர் குமரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு
சான்றிதழ்களையும், மெடல்களையும் வழங்கி பேசினார். கல்லூரி ஆளுநர் குழுவின் தலைவர் பாஸ்கர்பட் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த விழாவில் கல்லூரியின் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர் தலைவர் மகாதேவ் அகர்வால் வரவேற்றார். முடிவில் துணை தலைவர் பூஜா நன்றி கூறினார்.