தொட்டியம் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

0 354
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுகவை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் புனித ராணியை ஒன்றியக்குழு தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததால் பரபரப்பு.
முசிறி கோட்டாட்சியர் மாதவன் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 16 ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு தலைவர்

 

புனித ராணியை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆதரவாக வாக்களித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் புனித ராணி பங்கேற்கவில்லை. திமுக, காங்கிரஸ், தேமுதிக, அதிமுக, ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில் திமுக ஒன்றியக்குழு தலைவர் புனித ராணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு மற்றும் முசிறி கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்து இருந்த நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.