ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பலி!

0 386
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகே காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கி வந்த பேசஞ்சர் ரயிலில் அடிப்பட்டு இறந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை பொன்மலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை பேசஞ்சர் ரயில் வந்தது. இந்தநிலையில் திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே டிரேக்கை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத மூதாட்டியின் மீது அந்த பேசஞ்சர் ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த

 

மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடையாளம் தெரியாத அந்த மூதாட்டியின் உடலை மீட்டு உடனடியாக பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து யார் அந்த மூதாட்டி என விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.