“லிப்ட் கேட்டு” நூதன முறையில் வழிப்பறி; 3 வாலிபர்கள் கைது!

0 433
Stalin trichy visit

திருச்சியிலிருந்து முருகானந்தம் என்பவர் பைக்கில் துறையூருக்கு சென்றார். நொச்சியம் அருகே உள்ள அத்தாணி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்ற வாலிபர் ஒருவர் முருகானந்தத்திடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரை ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் சென்றபோது பின்னால் டூவீலரில் வந்த இரு வாலிபர்கள் முருகானந்தத்தை வழிமறித்து கத்திமுனையில் அவரிடம் இருந்தசெல்போன், பணம், மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்து கொண்டு முருகானந்தத்தை மிரட்டிவிட்டு ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பினர். இச்சம்பவம் குறித்து முருகானந்தம் மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முருகானந்தத்திடம் கத்திமுனையில்

 

பறிக்கப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் அப்பகுதியில் உள்ள ஏடிஎம்-ல் இருந்து பணம் ரூ.13 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது. ஏடிஎம் மிஷன் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் நொச்சியம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன்(21), அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சக்கரவர்த்தி(21), மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் நந்தா என்கின்ற நந்தகுமார்(21) ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் வாலிபர்களிடம் இருந்து கத்தி, ரொக்கம் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. லிப்ட் கொடுத்த நபரிடம் வாலிபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.