சாலை விபத்தில் வாலிபர் பலி!

0 428
Stalin trichy visit

திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவைச் சேர்ந்தவர் ரோஷன்(வயது 24). இவர் தனது நண்பர்கள் பாலசந்தர்(27), மொய்தீன்கான்(22) ஆகியோருடன் ஒத்தக்கடை நோக்கி பைக்கில் வந்தார். தலைமை தபால் நிலையம் சந்திப்பில் வந்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் சுவற்றின் மீது

 

மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ரோஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.