திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஓசரப்பள்ளியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 42). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சுபாஷினி (வயது 28). திருமணம் முடித்து 5 வருடங்களாகியும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்துள்ளார். கணவன் மனைவியரிடையே இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சுபாஷினி பக்கத்து தெருவிலுள்ள தனது பெற்றோருடன் இருந்ததாக தெரிய வருகிறது. மனவிரக்தியில் இருந்த முத்துசாமி தனது மனைவியிருக்கும் வீட்டின் முன்னே சென்று மண்ணெண்ணையை
ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டு அலறியதன் பேரில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்திலுள்ளோர் உயிருக்குப் போராடிய முத்துச்சாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததனர். முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.