நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எம்.எல்.ஏ.!
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மணப்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போத அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

உடன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பயாஸ் அகமது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காதர் மொய்தீன், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், திமுக நிர்வாகிகள் யுவனேஷ், ஆஷிக், அல்மாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.