சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு நாள் விழா!

0 423
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூர் சமுதாயக் கூடத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முசிறி கோட்டாட்சியர் மாதவன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சண்முகப்பிரியா, ஊராட்சி மன்ற தலைவர் கண்ணையன் ஆகிபோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். தோட்டக்கலை துறை அலுவலர் சரண்யா,

வேளாண்மை அலுவலர் கணேசன், குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் ராணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரளாதேவி ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 38 மனுக்கள் பெறப்பட்டு 28 மனுக்கள் ஏற்கப்பட்டது. 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 மனுக்கள் துறைசார்ந்த விசாரணைக்கு அனுப்பப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு பிரியா செய்திருந்தார். இறுதியில் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.