பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் சங்க செயற்குழு கூட்டம்!

0 469
Stalin trichy visit

திருச்சியில் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் சங்க செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சங்க செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். தலைவர் ஜெயம் பழனிசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டு தோறும் வள்ளுவர் குல ஜோதிடர்கள் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட ஆய்வு நூல்களை வெளியிடுவது, குருகுலம் அமைத்து வள்ளுவர்களுக்கு ஜோதிடம், பாரம்பரிய வைத்தியம், புரோகிதம்

 

செய்தல் உள்ளிட்டவைகளுக்கான பயிற்சி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் வள்ளுவர்களுக்கு குலத்தொழில் ஜோதிடம் பார்ப்பது என்பதை அரசு பதிவேட்டில் பதிவு செய்வதுடன், பல்லாயிரம் ஆம்டுகள் பாரம்பரியம் மிக்க குருத்துவ கலைகளை கற்பித்து வரும் வள்ளுவர் குலத்தவரை ஏற்கெனவே இருந்தது போல முற்படுத்தப்பட்டோர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் நியமம் மு. மதன் அகத்தியர் வரவேற்றார், துணை செயலாளர் அருணகிரி நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.