ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு 10 தண்ணீர் சில்வர் டிரம்கள் வழங்கல்!
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன் பெறும் வகையில் கோயில் வளாகம் முழுவதும் பல இடங்களில் குடி தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மேலும் 10 இடங்களில் குடி தண்ணீர் சில்வர் டிரம்களை வைப்பதற்க்கு இன்று 10 தண்ணீர் சில்வர் டிரம்களை திருச்சி இந்திராகாந்தி கல்லூரி மற்றும் சந்தானம் வித்யாலயா பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கே.சந்திரசேகரன் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்துவிடம் வழங்கினார்.