திருச்சி ரயில்வே பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு!

0 304
Stalin trichy visit

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில் பயணத்தின் போது அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தக்கூடாது. ரயில் எதிர்பாரதவிதமாக நடுவழியில் நிற்கும்போது, ரெயிலை விட்டு இறங்குவதும், ரயில்வே இருப்புபாதையில் நடப்பதும்,

 

தண்டவாளத்தை கடந்து செல்வதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். தண்டவாளத்தில் நின்றபடி செல்பி எடுக்கக்கூடாது. ஓடும் ரயில்களில் ஏறக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ரயில்வே பாதுகாப்புபிரிவினர் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.