திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பு தொழுகை!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக ரம்ஜான் பெருநாள் தொழுகை இன்று காலை 7.30 மணி அளவில் மரக்கடை சையது முர்துஸா பள்ளிகூட மைதானத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய பிரச்சாரகர் அப்துர் ரகுமான் பிர்தௌஸ்ஸி

சிறப்புரையாற்றினார். மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது MC, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணை அணிகள், கிளை நிர்வாகிகள், ஜமாத் தார்கள், சமூக பிரதிநிதிகள் அனைவரும் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். இச்சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.