மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

0 451
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை பகுதியில் 3 இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு நேற்று இரவு சென்று கொண்டு இருந்தனர்.  இதனை கவனித்த ரோந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பெரியகடை வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த வண்டியின் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் நடத்திய விசாரணையில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியை சேர்ந்த ரூபன்(20), பாலக்கரை வி.எம்.பேட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ்(20), மேலம்பிகாபுரத்தை சேர்ந்த மற்றொருவர் 15 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் இரவு தனது வீட்டின் முன் நிறுத்திய இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று பெரிய கடை வீதி மணியக்காரத் தொருவை சேர்ந்த வியாபாரி ராஜசேகர்(43) என்பவர் புகார் கொடுக்க வந்தார். அவரிடம் புகாரை பெற்று 3 பேர் மீதும் கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து திருச்சி ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ரூபன், சந்தோஷ் ஆகியோரை திருச்சி முசிறி கிளை சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுவனை கீழ புலிவார்டு ரோட்டில் உள்ள அரசினர் கூர் நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.