திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள மேனகா நகரில் கீழே சாய்ந்த கிடந்த பிளக்ஸ் பேனரை தூக்கி நிறுத்திய போது தொழிலாளிகள் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், கட்டட உரிமையாளர் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.
நம்பர் 1 டோல்கேட் மேனகா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அருகில் அதன் விற்பனைக்காக பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். கடந்த 10ஆம் தேதி இரவு பெய்த மழையால் பிளக்ஸ் பேனர் கீழே விழுந்தது. இந்நிலையில் அங்கு காவலாளியாக பணியில் இருந்த லால்குடி திருமங்கலத்தைச் சேர்ந்த 47 வயதான செல்லத்துரை கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க வந்த மண்ணச்சநல்லூர் அருகே சென்னகரை பகுதியை சேர்ந்த 36 வயதான சேட்டு மற்றும் தங்கராஜ் மகன் 29 வயதான விமல்நாத் ஆகியோர் உதவியுடன் பிளக்ஸ் பேனரை தூக்க முயன்றபோது அருகில் இந்த டிரான்ஸ்பர் மீது உரசியதில் 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் செல்லத்துரை, சேட்டு ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.விமல்நாத் காயங்களுடன் உயிர் தப்பினர்.இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாதுகாப்பின்றி பிளக்ஸ்பேனர் வைத்து விபத்து ஏற்பட காரணமாக இருந்ததாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உரிமையாளர்கள் லால்குடி அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்த (70)அப்துல் ரகுமான், நம்பர் 1 டோல்கேட் திருநாராயண நகரைச் சேர்ந்த (60) கமரூதீன், உறையூர் சாலை ரோடு பகுதியைச் சேர்ந்த (53) முகமது ரபிக் ஆகியோர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.