கோவில் விழாவில் நடனம் ஆடிய போது தகராறு : கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி சமத்துவபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவில் புதிய சமத்துவபுரத்தை சேர்ந்த (40) கணேசன் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. அவரை அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் (23) கிரண் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேசன் கையில் வைத்திருந்த பிளேடால் கிரணின் இடுப்பில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கிரன் லால்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்தனர்.