கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
திருச்சி, திருவெறும்பூர் கூத்தப்பார் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

திருச்சி மாவட்டம், கூத்தப்பார் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கைலாசபுரம், பாரதமிகுமின் குடியிருப்பு வளாகப்பகுதியில் பள்ளிக்குழந்தைகள், வேலைக்கு செல்லுபவர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கால்நடைகள், மாடுகள், குதிரைகளை உரிமையாளர்கள் ஒருவார காலத்திற்குள் பிடித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை மூலம் பிடித்து அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை கட்ட தவறினால் கால்நடைகள் வருவாய்த்துறை மூலம் ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.