கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த அரசுப்பள்ளி மாணவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. கதிரவன் ஆறுதல்

0 389
Stalin trichy visit

நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் அரசுப்பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி. மாணவனின் குடும்பத்திற்கு எம்எல்ஏ நேற்று ஆறுதல்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன்  நீர்மூழ்கி உயிரிழந்தார். மாணவனின் குடும்பத்திற்கு எம்எல்ஏ  கதிரவன் அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறினார்.

மண்ணச்சநல்லூர் புது காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் 17 வயதான சுதர்சன் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வு விடுமுறையின் போது கடந்த 14 ந் தேதி சனிக்கிழமை மாலையில்  நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்  மாணவனின் இறப்பு எனக்கு மனவேதனை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்.என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரது குடும்பத்திற்கு  ஆறுதல்  கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.