திருச்சி மாநகருக்குள் ஓடும் தனியார் பேருந்துக்கு நான் ஸ்டாப்பாம்….

0 926
Stalin trichy visit

திருச்சி மாநகர பகுதியில் ஓடும் தனியார் பேருந்துக்கு நான் ஸ்டாப் அங்கீகாரம் கொடுத்த அதிகாரிகள் யாரோ!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி வரை செல்லும் தனியார் பேருந்து நான் ஸ்டாப்பாக மார்க்கெட், திருவெறும்பூர், துவாக்குடி பேருந்து நிலையத்தில் மட்டும்தான் நிறுத்தப்படுமாம்.

பால்பண்ணை அரியமங்கலம் காட்டூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் நின்று செல்லாதாம். இதனால் இந்த தனியார் பேருந்தில் ஏறும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Leave A Reply

Your email address will not be published.