திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குதிரைகள் அட்டகாசம் – பொதுமக்கள் அவதி!

0 471
Stalin trichy visit

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நீண்ட காலமாக பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்து வருகிறது. இவை தினந்தோறும் நீதிமன்ற வளாகத்தில் திடீரென அங்கும் இங்கும் ஓடுகிறது.

இதனால் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இந்த குதிரைகள் அங்கும் ஓடுவதால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

உடனடியாக குதிரைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.