வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மண்டகப்படியில் பங்கேற்றார் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் கலந்துகொண்டு சாமி வீதி உலா நடைபெற்று சிறப்பு அபிஷேகம் செய்துவந்தனர்.
இதே போல் இன்று காவல்துறை மண்டகப்படியை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சுர்ஜித்குமார் கலந்துகொண்டார்.முன்னதாக மாரியம்மன் கோவில் பரம்பரை அரங்காவலர் ஆர்.வீ.எஸ்.மணி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மணப்பாறை காவல் நிலையத்தில் இருந்து மேலதாளத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் ஊர்வலமாக புறப்பட்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காவல் நிலைய வளாக பகுதியில் பொதுமக்கள் திராளாக கலந்துகொண்டு அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் மணப்பாறை காவல்துணை கண்கானிப்பாளர் இராமநாதன், மணப்பாறை காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள், மற்றும் அனைத்து காவலர்களும் கலந்துகொண்டனர்.