துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

0 358
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த 2019 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150 பேர் 18 ஆண்டுகளாகதுப்பாக்கி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புறவு உள்ளிட்ட வேலைகள் பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு புதிதாக காண்ட்ராக்ட் எடுத்த மனோன்மணி என்ற ஒப்பந்த நிறுவனம் பழைய தொழிலாளர்களை நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது.

அதனைத் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டுமென கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதற்கு ஒப்பந்த நிறுவனமும், துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் தற்போது அந்த மனோன்மணி நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

தற்பொழுது புதிதாக வரும் காண்ராக்ட் நிறுவனமானது பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மே ஒன்றாம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்,

இந்த நிலையில் இது சம்பந்தமாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என காவல்துறையினர் கூறியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில்ஒப்பந்த தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பெரியசாமி, பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மாவட்ட துணைத்தலைவர் இந்திரன் பொதுச் செயலாளர்கள் காளீஸ்வரன், பொன்தண்டபாணி ஒன்றிய தலைவர் மகாசக்தி முருகேசன் துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் இளநிலை விஜிலன்ஸ் மேலாளர் வரதன், இளநிலை செக்யூரிட்டி மேலாளர் விஜயகுமார், நவல்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.