முசிறியில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் : கண்டு கொள்ளாத காவல்துறையினர் – பொதுமக்கள் குற்றச்சாட்டு

0 493
Stalin trichy visit

திருச்சி முசிறி அருகே அமேசான் நிறுவனத்தின் டெலிவரி பாய்ண்ட் கடையின் பூட்டை உடைத்து நேற்று 2.50லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை ஹெல்மெட் திருடன் திருடி சென்ற சம்பவம்.

முசிறி காவல் நிலைய ஆய்வாளர் விதுன் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் – கடையில் டெலிவரிக்கு செல்லும் 15 ஊழியர்கள்,ஏற்கனவே வேலை செய்த ஊழியர்கள் உள்ளிட்ட 30க்கும் அதிகமானவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முசிறியை அடுத்த
ஜெம்புநாதபுரத்தில் நடந்த 11 பவுன் திருட்டு, நகர் பகுதியில் தாலி செயின் பறிப்பு என கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து
வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.