சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு, மக்கள் அதிகம் கூடும் இங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

0 324
Stalin trichy visit

இந்திய நாட்டின் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதையொட்டி, பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதேபோல் திருச்சி மத்திய பஸ் நிலையங்கள், ஜங்சன் ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகரை சுற்றியுள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3 நாட்களுக்கு கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதியும், கொரோனா விதிமுறைகளின் படியும் திருச்சி விமான நிலையத்தில் உள்ள பார்வையாளர் மாடம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் பிரதான நுழைவு வாயில், பயணிகள் விமான நிலையம் செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். உடமைகளும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதித்து அனுமதிக்கப்படுகிறது. இது மட்டுமன்றி முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்பட்டுள்ள்து.

Leave A Reply

Your email address will not be published.