திருச்சியில் 2 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

0 674
Stalin trichy visit

காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரகனேரி, பெரியார்நகர் அருகில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை காரில் வைத்து விற்பனை செய்த  வைத்தான் (எ) சுதாகர் (எ) வர்கீஸ்ராஜா (42)  என்பவரை கைது செய்தும், அவரிமிருந்து சுமார் 2 கிலோ 250 கிராம் (மதிப்பு ரூ.22,500/-) கஞ்சாவை கைப்பற்றி எதிரி மீது வழக்கு பதிவு செய்தும், கடந்த 24.ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாமண்டபம் புதுத்தெருவில் முன்விரோதம் காரணமாக விளையாட்டு வீரரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரி சுரேஷ் (எ) சுளுக்கி சுரேஷ் ( 21)  என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி வைத்தான் (எ) சுதாகர் (எ) வர்கீஸ்ராஜா மீது 3 கொலை முயற்சி வழக்கும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்ததாக 15 வழக்கும், பொதுமக்களை கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் பறித்த 10 வழக்கும். பொதுக்களை வழிமறித்து கொள்ளையடித்த 10 வழக்கும், 8 இதர வழக்கு உட்பட 45 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.  சுரேஷ் (எ) சுளுக்கி சுரேஷ் பொதுமக்களை அச்சுறுத்தி அரிவாள், கத்தி, பீர்பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதாக 4 வழக்கு உட்பட 5 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, எதிரிகள் வைத்தான் (எ) சுதாகர் (எ) வர்கீஸ்ராஜா மற்றும் சுரேஷ் (எ) சுளுக்கி சுரேஷ் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை தொடர்ந்து விற்பனை செய்வதும், ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர்.கார்த்திகேயன்,  மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன,

Leave A Reply

Your email address will not be published.