பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு ஆளான நிலையில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட கொலை குற்றவாளிகள் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்து தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிகழ்வு காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களின் மனதில் காயம் ஏற்பட்டுள்ளது.
மாநில தலைவர் கே. எஸ். அழகிரி அறிவிப்புக்கு இணங்க கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி வழிகாட்டுதலின் படி மணப்பாறை நகர தலைவர் M.A.செல்வா M.C தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் P.V.கணபதி, மணப்பாறை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சே.ராம்பிரகாஷ் மணப்பாறை நகர துணைத்தலைவர் பாவா இளங்கோ. மருங்காபுரி வடக்கு வட்டார தலைவர் சின்னப்பன், மணப்பாறை வட்டார கலைப் பிரிவு தலைவர் சத்திய சீலன், மணப்பாறை மணப்பாறை நகர துணைத்தலைவர் நசீம், மணப்பாறை நகர செயலாளர் வீரபாண்டியன், மணப்பாறை நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மணப்பாறை நகர சிறுபான்மை பிரிவு தலைவர் சித்திக் பாட்ஷா, வட்டார நிர்வாகிகள் சிவசண்முகம், மணிவேல் , பிரசாந்த், பாலசுப்ரமணி, ஜெகநாதன், மகிளா காங்கிரஸ் சரோஜா, . ராசாத்தி (தெத்தூர்) ஆகியோர் முன்னிலையில் வன்முறைக்கு எதிராக அறவழியில் மணப்பாறை காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெற்றது.