பள்ளி மாணவி மாயம்!

0 463
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆமூர் பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி திடீரென மாயமானார். காவல் நிலையத்தில் புகார்.

முசிறி வட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆமூர் பகுதியில் மாணவி ஒருவர் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். மாணவி பெற்றோர்களிடம் வேலைக்குச் செல்வதாக கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் மறுக்கவே மேற்கொண்டு படிப்பை தொடர சொல்லியுள்ளனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.