திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் பாதுகாப்பு குழு ஆய்வு
ரயில் நிலையங்களில் தூய்மை,வசதிகளை மேம்படுத்தும் கருத்துக்களை பெற்று ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்வது இக்குழுவின் நோக்கமாகும்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு ரயில் நிலையங்களில் ரயில் பயணிகள் பாதுகாப்பு குழு ஆய்வு மேற்கொண்டது.
அந்த வகையில் இன்று திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் நடைமேடைகல்,கழிப்பறை, காத்திருப்பு அறை, உணவகங்களில் ஆய்வு செய்தனர். அதே போல ரயில் நிலையத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா, நிறை குறைகள் என்ன என்பது குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த குழுவின் உறுப்பினர்கள் ஜெயிந்தி லால் ஜெயின், மோகன் லால் கிஹாரா ஆகியோர் பேசுகையில் தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
பிரதமர் மோடியின் சிறப்பான நடவடிக்கைகளால் ரயில்வே நிர்வாகம் மேம்பட்டு வருகிறது, பயணிகளின் கருத்துக்களும் இதனையே பிரதிபலிக்கின்றன.
தற்போது சிவகங்கையிலிருந்து சென்னை வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படுமா என்கிற கேள்விக்கு பதிலளித்தவர்கள், இதே கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வந்துள்ளது. இதன் கருத்துருக்களை ரயில்வே நிர்வாகத்திடம் அனுப்பி வைப்போம்,அதே போல திருச்சி முதல் தஞ்சை பயணிகள் ரயில் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ. 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதனை குறைக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து உரிய தீர்வு எட்டப்படும் என்றார்.