மணப்பாறை முத்தம்மாள், மாமுண்டி, நானம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மான்பூண்டி ஆற்றின் கரையோரத்தில் முத்தம்மாள், மாமுண்டி, நானம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததை அடுத்து பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலின் கோபுர கலசத்திற்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானில் வட்டமிட கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.