சிறப்பு முகாமிலுள்ள வெளிநாட்டவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

0 685
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் எப்ஸிபன் (23), கொன்பியூசியஸ்(28), ரெஜிபன்(24), ப்ரணாவன்(28), சௌந்தர்ராஜன் (53) வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோர் அவர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இப்போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில்,

சிறப்பு முகாம் என்னும் வெளிநாட்டவர் துறையிலே வழக்குகளை முடித்தும் விசா முடிந்த மற்றும் கடல் வழியாக இந்தியாவிற்கு வந்ததற்காக வும் இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்ற குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு விடுதலை கிடைக்குமா என்ற கேள்விகளோடு கடந்த மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ள இன்று எங்கள் விடுதலைக்கான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கிறோம்.

இரண்டு நாட்களாக சிறப்பு முகாமில் விடுதலை கிடைக்குமா என்ற நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறோம் ஊடக நண்பர்களிடம் தாழ்மையாக கேட்டு கொள்கிறோம் தங்கள் உதவியை எங்களுக்கு வழங்கி எங்களை எங்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

Leave A Reply

Your email address will not be published.